இந்தியா

தெலங்கானாவில் குறைந்துவரும் கரோனா: இன்று 157 பேருக்குத் தொற்று

10th Feb 2021 12:22 PM

ADVERTISEMENT

 

தெலங்கானா மாநிலத்தில் சமீபமாக கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 157 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் தொற்றுக்குப் பலியானதைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது,

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கூறுகையில், 

ADVERTISEMENT

கரோனா பாதித்து இதுவரை 2,92,578 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, மீட்பு விகிதம் 98.84 ஆகவும் உள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,797 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 29,666 மாதிரிகள் சோதனை செய்துள்ளதையடுத்து நாட்டில் மொத்தம் 81.84 லட்சம் சோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT