இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் பலி, 11 பேர் காயம்

9th Feb 2021 11:07 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தின் ஜலல்பூர் பகுதியில் வாரணசி-ஜான்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்தது, 

வாரணசியில் நடந்த தகன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 பேரும் ஜீப்பில் திரும்பிகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். 

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

விபத்தில் பலியானவர்கள் அமர் பகதூர் யாதவ் (58), ராம் சிங்கர் யாதவ் (38), முன்னிலால் (38), இந்திரஜித் யாதவ் (48), கமலா பிரசாத் யாதவ் (60), ராம்குமார் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சராய் குவாஜா பகுதியில் உள்ள ஜலல்பூர் கிராமத்தில் வசிக்கும் தனது 112 வயது பாட்டி உயிரிழந்த நிலையில், அவரது மருமகன் லட்சுமி சங்கர் யாதவ் 17 பேருடன் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் சென்றதாகவும் கூடுதல் காவல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார். 

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT