இந்தியா

விவசாயிகளிடம் பாஜக கொள்ளையடிக்கிறது: மம்தா

9th Feb 2021 03:38 PM

ADVERTISEMENT

விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பர்தாமன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், விவசாயிகளிடம் கொள்ளையடித்து அவர்களது நிலத்தை அபகறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இறுதியில் விவசாயிகள் ஏதுமற்றவர்களாக கைவிடப்படுவார்கள். விவசாயிகள் தங்கள் உடல் உழைப்பின் மூலம் நிலத்தை உழுது விதைத்து பயிர்களை அறுவடை செய்வார்கள். ஆனால் பாஜக நிலம் உள்பட அனைத்தையும் விவசாயிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளும் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT