இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்களுக்கு இடமில்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி!

8th Feb 2021 08:02 PM

ADVERTISEMENT

 

காசிப்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்களுக்கு இடமில்லை என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

340 கி.மீ., நீளத்தில் அமையவுள்ள ‘புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வே’ திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய, திங்களன்று காசிப்பூரில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

நெடுங்கலாமாக புர்வாஞ்சல் பகுதி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மாபியா கலாச்சாரத்தினை முற்றாக ஒழிக்கும் முயற்சியில் நமது அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. முந்தைய அரசாங்கங்கள் மாபியா கலாச்சாரம் மற்றும் கிரிமினல்களை வளர்த்தெடுத்து வந்த காரணத்தினால்தான், மாநிலம் வளர்ச்சியடைவது பெருமளவு தடைபட்டது.

ADVERTISEMENT

புதிய உத்தரப்பிரதேசத்தில் மாபியா கும்பல்கள், கிரிமினல்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு இடமில்லை. கிராமங்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வளர்ச்சி ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேநேரத்தில், புர்வாஞ்சல் பகுதியின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மாபியா கலாச்சாரத்தினை ஒழிப்பதும் முக்கியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபகாலமாக உத்தரப்பிரதேச மாநில அரசு மாபியா கும்பல்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT