இந்தியா

'மற்ற துறைகள் குறித்து பேசும்போது கவனம் தேவை': சச்சினுக்கு சரத் பவார் அறிவுரை

6th Feb 2021 10:20 PM

ADVERTISEMENT


மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுபற்றி சரத் பவார் பேசியது:

"விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்.

பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதின் கட்கரி போன்ற அரசின் மூத்த தலைவர்கள் முன்வந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச வேண்டும். அப்படி பேசினால் தீர்வு கிடைக்கும். மூத்த தலைவர்கள் முயற்சி எடுத்தால் வேளாண் சங்கத் தலைவர்களும் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும்."

ADVERTISEMENT

முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டினர் கருத்து தெரிவித்ததற்கு, நாட்டின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்தார். சச்சினின் இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

Tags : Sharad Pawar
ADVERTISEMENT
ADVERTISEMENT