இந்தியா

தில்லி: ஆணியடிக்கப்பட்ட சாலைகளில் பூச்செடிகளை நட்ட விவசாயிகள்

6th Feb 2021 11:21 AM

ADVERTISEMENT

தில்லி சாலைகளில் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் ஆணியடிக்கப்பட்டிருந்த இடங்களில் விவசாயிகள் பூச்செடிகளை நட்டனர்.

தில்லியின் காஜிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அப்பகுதியிலிருந்த மக்களுடன் இணைந்து காவல்துறை தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

எனினும் காஜிப்பூர் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் காஜிப்பூர் எல்லையில் விவசாயிகள் டிராக்டர் மூலம் மீண்டும் எல்லையில் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் ஆணி, கம்பி உள்ளிட்டவற்றை அடித்து வைத்தனர்.

இதனிடையே நாடாளுமன்ற எம்.பி.க்கள் விவசாயிகளை சந்திக்க வருதவையொட்டி விவசாயிகளே அந்த ஆணிகளையும் கம்பிகளையும் அகற்றினர்.

இதனிடையே ஆணியடிக்கப்பட்ட காஜிப்பூர் சாலைகளில் விவசாயிகள் ரோஜாச் செடிகளை நட்டுள்ளனர். சாலையோரங்களில் ரோஜாச் செடிகளை நட்ட விவசாயிகள் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி ஆணியடிக்கப்பட்ட இடங்களை பசுமையாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT