நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டு தொற்று அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
படிக்க: நாட்டில் புதிதாக 11,713 பேருக்கு கரோனா - முழு விவரம்
கரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 7,40,794 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,06,72,589-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.