கைமுர்: பிகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் இருந்து ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், மற்ற இருவரது உடல்களை அவர்களது உறவினர்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடற்கூராய்வுக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்க முடியும் என்று காவலர்கள் கூறியுள்ளனர்.