இந்தியா

காவல்துறை மீதான மனித உரிமை மீறல் வழக்குகளில் உ.பி. முதலிடம்; தமிழகம் 3-ம் இடம்

4th Feb 2021 12:45 PM

ADVERTISEMENT


புது தில்லி: 2020 - 21-ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் காவல்துறையினர் மீது சுமார் 11 ஆயிரம் மனித உரிமை மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக 5,388 வழக்குகள் உத்தரப்பிரதேச காவல்துறை மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், காவல்துறையினர் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதாக பதியப்பட்ட  784 வழக்குகளில், விசாரணை நடத்தி 48 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.20.42 கோடியை வழங்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. 60 ஆகிறது தமிழக அரசு ஊழியர்கள்  ஓய்வுபெறும் வயது: விரைவில் அறிவிப்பு

காவல்துறையினர் மீது பதியப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சதவ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி வெளியிட்ட விளக்கத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, கடந்த 2020 - 21-ஆம் நூற்றாண்டில் காவல்துறையினர் மது 11,130 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றும், கடந்த ஆண்டு இது 17,229 ஆகவும், 2018 - 19-ஆம் நிதியாண்டில் இதுவே 28,342 ஆகவும், 2017 - 18-ஆம் நிதியாண்டில் இது 26,391 ஆக இருந்ததகாவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மீதான மனித உரிமை மீறல் வழக்குகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், 940 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் தில்லியும், 575 வழக்குகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT