தில்லியில் டிராக்டர் பேரணியின்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திக்கவுள்ளார்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த நவ்ரீத் சிங் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தை பிரியங்கா காந்தி சந்திக்கவுள்ளார்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்றபோது காவல்துறையினர் விரட்டியதில் டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி நவ்ரீத் சிங் உயிரிழந்தார்.
விவசாயியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் வகையில் ராம்பூருக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 71-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.