தில்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகளைச் சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லைகளில் 70 நாள்களைக் கடந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்றனர்.
அப்போது காசிப்பூர் முக்கிய எல்லையில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் அப்பகுதியை முழுவதுமாக அடைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன், செல்வராஜ், சு.வெங்கடேசன், ரவிக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதில் எம்.பி.க்கள் உறுதியாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.