புது தில்லி: நாட்டில் புதிதாக 12,899 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,07,90,183 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,07,90,183 ஆக அதிகரித்தது.
கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,80,455 ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றுக்கு மேலும் 107 போ் உயிரிழந்தனா். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,703 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 15-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாடு முழுவதும் 1,55,025 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்) தகவல்படி, இதுவரை 19.92 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,42,841 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.