இந்தியா

விவசாயிகள் போராட்டம்: அமித்ஷாவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசனை

4th Feb 2021 05:52 PM

ADVERTISEMENT

தில்லியில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 70 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தில்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். 

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

Tags : Amit Shah
ADVERTISEMENT
ADVERTISEMENT