தில்லியில் 2024-ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகித மின்சார வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் 'ஸ்விட்ச் தில்லி' இயக்கத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், டெல்லியில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் 25 சதவிகித அளவிற்கு மின்சார வாகனங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுசூழல் மாசடைவதை தடுப்பதில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக முக்கியமானது. மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை இயக்கமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.