மகாராஷ்டிரத்தில் புதிதாக 2736 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2736 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,36,002 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5339 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,48,674 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 46 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 51,215 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 37,862 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.