நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 320 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 641 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா: புதிதாக 13,154 பேர் பாதிப்பு
அதில், அதிகபட்சமாக தில்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 252 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.