இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

30th Dec 2021 08:36 AM

ADVERTISEMENT

 

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஜி விஜய்குமார் கூறியதாவது:

அனந்த்நாக் மற்றும் குல்கம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

இதில், இரண்டு இடங்களில் மொத்தம் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் பாகிஸ்தான் மற்றும் இருவர் உள்ளூர் தீவிரவாதிகள். மேலும், இரண்டு பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT