இந்தியா

மும்பையில் ஜன.7 வரை 144 தடை உத்தரவு அமல்

30th Dec 2021 08:25 AM

ADVERTISEMENT

மும்பையில் இன்றுமுதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மும்பையில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் 3900 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மும்பை முழுவதும் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT