இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

30th Dec 2021 04:47 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: குல்காமின் மிர்ஹமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டூரு பகுதியின் நவ்ஹாம் ஷாகாபாத் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு காவலர் காயமடைந்தார் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT