இந்தியா

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பாதிரியாருக்கு ஆயுள் சிறை

30th Dec 2021 04:47 AM

ADVERTISEMENT

 

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தேவாலயத்தில் 13 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி தகாத முறையில் நடந்துகொண்ட பாதிரியாருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
மும்பை புறநகரான தாதர், சிவாஜி நகரில் உள்ள தேவாலயத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி தன் சகோதரருடன் 13 வயது சிறுவன் சென்றுள்ளார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட  அந்தச் சிறுவனிடம், அங்கிருந்த பாதிரியார் ஜான்சன் லாரன்ஸ், தனது அறைக்குள் ஒரு பெட்டியை வைக்குமாறு கூறி அழைத்தாராம். உள்ளே சென்ற தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்தப் பாதிரியார் மீது, காவல் துறையிடம் சிறுவன் புகார் தெரிவித்தார். அந்தப் பாதிரியார் ஏற்கெனவே தன்னிடம் ஆகஸ்ட்  மாதமும் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்தச் சிறுவன் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பாதிரியார் ஜான்சன் லாரன்ஸ், போக்úஸô சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அச்சிறுவன் குற்றவியல் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். இவ்வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சீமா ஜாதவ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜான்சன் லாரன்ஸூக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சீமா ஜாதவ் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக அரசு சிறப்பு வழக்குரைஞர் வீணா ஷெலர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT