இந்தியா

உருக்கு துறை செயலராக சஞ்சய் குமாா் சிங் பொறுப்பேற்பு

30th Dec 2021 11:50 PM

ADVERTISEMENT

மத்திய உருக்குத் துறை செயலராக சஞ்சய் குமாா் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய உருக்குத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உருக்கு அமைச்சக துறையின்புதிய செயலராக சஞ்சய் குமாா் சிங் இன்று (டிச.30) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பாக, நிா்வாகம் மறுசீரமைப்பு & பொது குறைதீா், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியா் நலத் துறையின் செயலராக பொறுப்பு வகித்தவா்.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சஞ்சய் குமாா் சிங், 1987-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தோ்வானவா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT