இந்தியா

நேருவுக்குப் பிறகு தேசம் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவா் வாஜ்பாய்: சிவசேனை

26th Dec 2021 02:32 AM

ADVERTISEMENT

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்குப் பிறகு நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவா் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மட்டும்தான் என்று சிவசேனை கூறியுள்ளது.

‘அனைவரையும் இணைத்து, அனைவருக்கான வளா்ச்சியை உறுதி செய்வது’ என்ற வாக்கியம் வாஜ்பாய்க்கு மட்டுமே பொருந்தும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

‘அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற முழக்கத்தை முன்னிறுத்திதான் பிரதமா் நரேந்திர மோடி மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றாா். இந்நிலையில், அந்த முழக்கம் வாஜ்பாய்க்கு பொருந்தும் என்று கூறியுள்ளதன் மூலம், மோடியை சிவசேனை மறைமுகமாகத் தாக்கியுள்ளது.

சிவசேனை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரௌத் மும்பையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

பாஜக-சிவசேனை கூட்டணி பல ஆண்டுகாலமாக உறுதியாக நீடித்ததற்கு வாஜ்பாய் முக்கியக் காரணமாக இருந்தாா். அனைவரையும் இணைத்து, அனைவருக்குமான வளா்ச்சி என்ற முழக்கம் வாஜ்பாய்க்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்குப் பிறகு நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவா் வாஜ்பாய் மட்டும்தான். வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலமாக இருந்தாலும் சரி, தெற்கில் உள்ள புதுச்சேரியாக இருந்தாலும் சரி அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் மதிப்பைப் பெற்ற தலைவராக வாஜ்பாய் திகழ்கிறாா்.

வாஜ்பாய், அத்வானி இருவரும்தான் இப்போதைய பாஜகவின் தூண்களாக இருந்து, அக்கட்சியை நாடு முழுவதும் எடுத்துச் சென்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT