இந்தியா

பசுவைத் தாயாக மதிக்கிறோம்: பிரதமர் மோடி 

23rd Dec 2021 05:22 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் 870 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். எதிர்க்கட்சியினரை கடுமையாக சாடிய அவர், "பசுக்களை பற்றி பேசினாலே அதை குற்றமாக சிலர் பாவிக்கின்றனர். ஆனால், நாம் பசுவைத் தாயாக மதிக்கிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "இந்தியாவின் பால்பண்ணைத் துறையை வலுப்படுத்துவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். பசுவைப் பற்றியும் 'கோவர்தன்' பற்றியும் பேசுவதை சிலர் குற்றமாக்கியுள்ளனர்.

பசுவை பற்றி பேசுவது சிலருக்குக் குற்றமாக இருக்கலாம். ஆனால் நாம் பசுவை தாயாகப் போற்றுகிறோம். பசு மற்றும் எருமைகளை கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகின்றனர்.

நாட்டின் பால் உற்பத்தி 6-7 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் பால் உற்பத்தியில் இந்தியா 22 சதவீதத்தை கொண்டுள்ளது. உத்தரபிரதேசம் நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் மட்டுமல்ல, பால் துறையின் விரிவாக்கத்திலும் மிகவும் முன்னால் உள்ளது. 

ADVERTISEMENT

நாட்டின் வெண்மைப் புரட்சியின் புதிய ஆற்றல், பால் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை, விவசாயிகளின் நிலையை மாற்றுவதில் பெரும் பங்காற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதையும் படிக்கசீனாவுக்கு போட்டியாக அருணாசல எல்லை கிராமங்கள் மேம்பாடு திட்டம்: முதல்வர் பெமா காண்டு

நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கூடுதல் வருமானம் தரும் ஒரு பெரிய ஆதாரமாக மாறும். இந்தியாவின் பால் பொருள்கள் ஒரு பெரிய வெளிநாட்டு சந்தையைக் கொண்டுள்ளன, மேலும் நாம் வளர நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

பின்னர், முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், "முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது நினைவாக நாடு முழுவதும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது" என்றார்.

அடுத்தாண்டு தொடக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


 

Tags : modi Cow
ADVERTISEMENT
ADVERTISEMENT