பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களை முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 3 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிக்க | சட்டப்பேரவைத் தேர்தல்: பஞ்சாப் எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் சோனியாகாந்தி
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்ற வளாகத்தின் கழிவறைப் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியானதோடு 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பலத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலை குலைக்க இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.