இந்தியா

காஷ்மீர்: சக்திவாய்ந்த வெடிகுண்டு செயலிழப்பு

23rd Dec 2021 12:43 PM

ADVERTISEMENT

காஷ்மீரில் மறைத்து வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டை இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயலிழக்கச் செய்தனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் நேவா ஸ்ரீநகர் சாலையில் தாக்குதல் நடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த 5 கிலோ ஐஇடி வெடிகுண்டை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்களைக் வரவழைத்துச் செயலிழக்கச் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் , ‘ புல்வாவாமின் நேவா ஸ்ரீநகர் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலழிக்கச் செய்ததால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது’ எனத் தெரிவித்தனர்.

மேலும், வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT