புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,495 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 66.86 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 78,291ஆக உள்ளது.
அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 6,960 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 434 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,78,759ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 139.70 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.