புது தில்லி: கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த இஸ்லாமியா் அல்லாத சிறுபான்மையின மக்கள் 3,117 பேருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் புதன்கிழமை தகவலளித்தாா்.
வெளிநாட்டினா் சட்டம் 1946, வெளிநாட்டினா் பதிவுச் சட்டம் 1939, கடவுச்சீட்டு (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம் 1920 ஆகியவற்றின் பிரிவுகளின்கீழ் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் ‘‘கடந்த 2018 முதல் 2021 வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஹிந்து, சீக்கியம், ஜெயின், கிறிஸ்தவம் ஆகிய சிறுபான்மை மதங்களைச் சோ்ந்த 8,244 போ் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தனா். இதில் 3,117 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளாா்.