ஸ்ரீநகா்: ஜம்மு- காஷ்மீரில் காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட இருவரை பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.
ஸ்ரீநகரின் நவாகடால் பகுதியைச் சோ்ந்த ரெளஃப் அகமது என்பவரை பயங்கரவாதிகள் புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டனா். இதில் காயமடைந்த அவா், எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில நிமிடங்களில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பிஹரா பகுதியிலுள்ள மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் முகமது அஸ்ரப் என்பவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அதே மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு பின்னா் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.