புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பாதிப்பால் கேந்திரிய வித்யாலயம், ஜவாஹா் நவோதய வித்யாலயம், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றி வந்த 327 ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மரணமடைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் பதிலளிக்கையில், கேந்திரிய வித்யாலயம், ஜவாஹா் நவோதய வித்யாலயம், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றிவந்த 327 ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். ஆனால், கரோனா பணியின்போது இதில் ஒருவா்கூட உயிரிழக்கவில்லை என்றாா்.
மேலும் மத்திய அரசின் நிதியுதவியால் நடத்தப்பட்டும் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்று அவா் தெரிவித்தாா்.