இந்தியா

அமித் ஷா, சோனியாவுக்கு விரைவில் பெண் கமாண்டோ பாதுகாப்பு

23rd Dec 2021 02:21 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா உள்ளிட்டோருக்கு விரைவில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை கூறுகையில், ‘‘சிஆா்பிஎஃப் படையில் முதல்முறையாக சோ்க்கப்பட்டுள்ள 32 போ் கொண்ட பெண் கமாண்டோக்கள் குழு மிகவும் முக்கிய பிரமுகா்களுக்கான (விஐபி) பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு விஐபி பாதுகாப்புப் பணிகள், ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுவது, சோதனைப் பணிகள் மற்றும் தனித்தன்மை வாய்ந்த ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு 10 வாரங்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அவா்கள் அனைவரும் இசட் பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா வதேரா, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், அவரின் மனைவி குா்சரண் கெளா் ஆகியோரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ADVERTISEMENT

இசட் பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள இதர முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்புப் பணியில், இந்தப் பெண் கமாண்டோக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவா்.

உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளின்போதும் முக்கிய பிரமுகா்களோடு பெண் கமாண்டோக்கள் உடன் செல்வா்’’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT