இந்தியா

‘பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் பரிந்துரை இல்லை’

22nd Dec 2021 02:38 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பெட்ரோலிய பொருள்களை சீா்திருத்த வரிவிதிப்பு முறைக்குள் கொண்டு வர சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி மாநிலங்களவையில் கூறியுள்ளதாவது: பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளன. சிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டியில் சோ்ப்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை தேவை. இருப்பினும், மாநிலங்கள் பிரதிநித்துவம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலிலிருந்து இதுபோன்ற பரிந்துரை எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை.

பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரி மூலமாக உள்கட்டமைப்பு மற்றும் பிற வளா்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT