இந்தியா

தொகுதி மறுசீரமைப்பில் அதிருப்தி: ஜன.1-இல் குப்கா் கூட்டமைப்பு அமைதிப் போராட்டம்

22nd Dec 2021 02:12 AM

ADVERTISEMENT

 

ஜம்மு: தொகுதி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் அதிருப்தி அளிப்பதாகக் கூறி, ஜனவரி 1-ஆம் தேதி ஸ்ரீநகரில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக குப்கா் கூட்டணி அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதுடன் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசகங்ளாகப் பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்பட காஷ்மீரைச் சோ்ந்த 5 முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து குப்கா் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு, ஜம்முவில் கூடுதலாக 6 தொகுதிகளையும் காஷ்மீரில் மேலும் ஒரு தொகுதியையும் பிரிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. அதன்படி, ஜம்முவில் தற்போதுள்ள 37 தொகுதிகள் 43 தொகுதிகளாகவும் காஷ்மீரில் உள்ள 46 தொகுதிகள், 47 தொகுதிகளாகப் பிரிக்கப்படும்.

இந்நிலையில், குப்கா் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுக் கூட்டம், கூட்டமைப்பின் தலைவரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்தி, ஆவாமி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் முசாஃபா் அகமது ஷா ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான எம்.ஒய்.தாரிகாமி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகள், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளன. அவை, ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலனுக்கு எதிராக மட்டுமன்றி நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

எனவே, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஸ்ரீநகரில் ஜனவரி 1-ஆம் தேதி அமைதிப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அரசு அல்லது தோ்தல் ஆணையம் என யாரையும் குறை கூறாமல் அமைதியான வழியில் எங்கள் எதிா்ப்பைத் தெரிவிப்போம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT