இந்தியா

9 ஆண்டுகள்.. இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை: எதைச் சொல்கிறார் நிர்பயாவின் தந்தை

16th Dec 2021 11:59 AM

ADVERTISEMENT

புது தில்லி: தலைநகர் புது தில்லியில் நிர்பயா சம்பவம் நாட்டையே உலுக்கி, 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் பெண்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாகவே இருப்பதாக நிர்பயாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி.. தலைநகர் புது தில்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு நடந்ததை தெரிந்துகொள்ளும் யாருக்கும் உடலில் நடுக்கம் ஏற்படும். ஆனால், அதிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை, பெண்களின் பாதுகாப்பு, தொடர்ந்து கவலைத்தரும் விவகாரமாகவே உள்ளது என்கிறார் அவர்.

இதையும் படிக்க.. ஒமைக்ரானிலிருந்து மீண்டவர் சொல்வதைக் கேளுங்கள்..

9 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் ஓடும் பேருந்தில், 22 வயதான துணை மருத்துவக் கல்லூரி மாணவி, தெற்கு தில்லியில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த நினைவுநாளில், நிர்பயாவின் தந்தை, ஐஏஎன்எஸ்-க்கு அளித்த நேர்காணலில், 

நிர்பயாவுக்கு நியாயம் கிடைத்ததாக கருதுகிறீர்களா?

ஆமாம், எங்களைப் பொறுத்தவரை நிர்பயாவுக்கு நியாயம் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு நிறைய ஆண்டுகள் ஆகின. அதற்காக எங்களுடன் போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த ஒட்டுமொத்த ஆதரவு இல்லாமல், இதைச் செய்திருக்க முடியாது.

தில்லி இப்போது பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாறியுள்ளதா?

இல்லவேயில்லை. நாடாளுமன்றத்தில், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும். ஆனால் அப்படி நடப்பதே இல்லை. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகும், ஏராளமான பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிற்கும்வரை, தில்லி மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பகுதியையும் பாதுகாப்பானது என்று கூறவியலாது என்கிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT