இந்தியா

இன்னமும் 32,000 கேள்விகளுக்கு பதில் சொல்லாத மத்திய தகவல் ஆணையம்

16th Dec 2021 05:13 PM

ADVERTISEMENT


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32,000 கேள்விகள், இன்னமும் மத்திய தகவல் ஆணையத்தின் முன் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், 2019-20ல் 35 ஆயிரம் கேள்விகளும், 2020-21ஆம் ஆண்டில் 38 ஆயிரம் கேள்விகளும் பதிலளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2021-22ஆம் ஆண்டில் டிசம்பர் 6ஆம் தேதி நிலவரப்படி, 32,147 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல், மத்திய தகவல் ஆணையம் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT