இந்தியா

வங்கதேச போர் வெற்றி நாள் நிகழ்ச்சியில் இந்திரா காந்தியின் பெயர்கூட குறிப்பிடவில்லை: ராகுல் காந்தி

16th Dec 2021 06:04 PM

ADVERTISEMENT

வங்கதேச போர் வெற்றி நாள் நிகழ்ச்சியில் இந்திரா காந்தியின் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இந்த அரசு உண்மையைக் கண்டு ஏன் பயன்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல குடும்பங்களைப் போலவே, தனது குடும்பமும் இந்த நாட்டிற்காக தியாகம் செய்தது. அதுதான் இந்த மாநிலத்துடனான எனது உறவு, இதுவே உத்தரகண்ட் உடனான எனது உறவு' என்று குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

மேலும், தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியைப் பற்றி குறிப்பிடுகையில், 'வங்கதேச போர் வெற்றி நாள் நிகழ்ச்சி தில்லியில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இந்திரா காந்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நாட்டிற்காக 32 தோட்டாக்களைத் தாங்கியவர் அவர். அழைப்பிதழில் அவரது பெயர்கூட இடம்பெறவில்லை. இந்த அரசு உண்மையை கண்டு பயப்படுகிறது.

தேசத்துக்காக எந்த தியாகமும் செய்யாத குடும்பங்களால் இந்த வலியை உணர முடியாது' என்றார். 

அதுமட்டுமின்றி, '1971 போரில் இந்தியா வெற்றி பெற்றதற்குக் காரணம் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருந்ததுதான்' என்றும் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT