இந்தியா

பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

16th Dec 2021 11:27 AM

ADVERTISEMENT

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுவது குறித்து பரிசீலனை செய்துவருவதாக பிரதமர் மோடி கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த அறிவிப்பை, கடந்தாண்டு சுதந்திர தின விழாவின் போது பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். அப்போது பேசிய அவர், "நமது மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மகள்களை காப்பாற்ற, சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது அவசியம்.

தற்போது, ஆண்களின் திருமண வயது 21ஆகவும், பெண்களுக்கு 18ஆகவும் உள்ளது. குழந்தை திருமண தடைச் சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்து திருமண சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுவருகிறது. இதன் மூலம், பெண்கள் திருமண வயது உயர்த்தபடுகிறது.

இதையும் படிக்க | முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவணே

ADVERTISEMENT

ஜெயா ஜெட்லிதலைமையிலான நிதி ஆயோக் பணிக்குழு, மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினராக உள்ள வி.கே. பால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அலுவலர்களின் இந்த பணிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த பணிக்குழு, கடந்தாண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. பெண்கள், முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அவர்களின் வயது குறைந்தப்பட்சம் 21ஆக இருக்க வேண்டும் என பணிக்குழு பரிந்துரை செய்தது. திருமணத்தை தாமதப்படுத்துவதன் மூலம் பொருளாதார, சமூக, சுகாதார ரீதியாக குடும்பம், குழந்தைகளின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT