இந்தியா

முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவானே!

16th Dec 2021 09:29 AM

ADVERTISEMENT


முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக எம்.எம். நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT