இந்தியா

லக்கிம்பூர் விவகாரம்: உ.பி. சட்டப்பேரவையில் காங். எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

16th Dec 2021 10:40 AM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவைக்கு வெளியே மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் உள்ளதால், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா உடனடியாக விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT