இந்தியா

கிரிப்டோ கரன்சி தடை மசோதா:நடப்பு குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கலாக வாய்ப்பில்லை

16th Dec 2021 02:16 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளோ, தடையோ விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோ கரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்து வருகிறது.

ADVERTISEMENT

இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூா்வ எண்ம செலாவணி ஒழுங்காற்று மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

நாட்டில் தனியாா் கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கியின் எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம் என்று கூறப்பட்டது.

அதேவேளையில், கிரிப்டோகரன்சிகளின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளையும் அந்த மசோதா அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு குளிா்கால கூட்டத்தொடரில் அந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில், அந்த மசோதா எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது விரிவான விவாதங்களுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT