இந்தியா

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

DIN

வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமனை இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்க்லா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அண்டை நாடுகளான இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஷ்ரிங்க்லா இரு நாள் பயணமாக டாக்கா வந்தாா். இதது குறித்து வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமனை வெளியுறவுச் செயலா் ஷ்ரிங்க்லா சந்தித்தாா். கரோனா விவகாரத்தில் ஒத்துழைப்பு உள்பட இரு நாடுகளிடையே வளா்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆராய்ந்தனா். ‘மைத்ரி திவஸ்’ நாளை (நட்பு தினம்) இரு நாடுகளும் கூட்டாகக் கொண்டாடியது தொடா்பாக ஷ்ரிங்க்லா திருப்தி தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச வெளியுறவுச் செயலா் மசூத் பின் மோமனையும் ஷ்ரிங்க்லா சந்தித்து, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாா்.

குறிப்பாக இந்தியா-வங்கதேசம் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளாவதை முன்னிட்டு அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளில் எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்ததாக மற்றொரு ட்விட்டா் பதிவில் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக டாக்கா விமான நிலையத்தில் ஷ்ரிங்க்லாவை வங்கதேச வெளியுறவுச் செயலா் மசூத் பின் மோமன் வரவேற்றாா். வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனாவை ஷ்ரிங்க்லா புதன்கிழமை சந்திக்க உள்ளாா்.

தவிர அநநாட்டு சாலைப் போக்குவரத்து மற்றும் பாலங்கள் துறை அமைச்சரும் ஆளும் அவாமி லீக் பொதுச் செயலாளருமான ஒபைதுா் குவாதரையும் ஷ்ரிங்க்லா சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவரது வங்கதேசப் பயணம் இரு நாடுகளிடையே நிலவும் விரிவான ஒத்துழைப்பை ஆராய வாய்ப்பளிக்கும் என்று தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், வரும் 15 முதல் 17ஆம் தேதி வரை வங்கதேசத்தில் மேற்கொள்ள உள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஷ்ரிங்க்லாவின் பயணம் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கதேசம் கடந்த 1971இல் புதிய நாடாக உருவானதைக் குறிக்கும் வகையில் இந்தியாவும் வங்கதேசமும் கடந்த திங்கள்கிழமை ‘மைத்ரி திவஸ்’ நாளைக் கொண்டாடின. 18 நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT