இந்தியா

ஒமைக்ரான் தீநுண்மியில் இருந்து குணமான மருத்துவருக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

8th Dec 2021 02:34 AM

ADVERTISEMENT

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டு குணமான பெங்களூரைச் சோ்ந்த மருத்துவா், மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்.

இந்தியாவில் முதன்முறையாக உருமாறிய ‘ஒமைக்ரான்’ - கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட இருவா் கா்நாடகத்தில் கண்டறியப்பட்டனா். குஜராத்தை மூலமாகக் கொண்டு தென் ஆப்பிரிக்க குடியுரிமை பெற்றிருந்த ஒருவா், ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா். இது தொடா்பாக, அந்த நபா் தங்கியிருந்த நட்சத்திர உணவு விடுதியின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட மற்றொருவரான பெங்களூரைச் சோ்ந்த மருத்துவா், ஒமைக்ரான் தீநுண்மி தொற்றில் இருந்து குணமடைந்திருந்த நிலையில், மீண்டும் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பலரையும் அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவா் மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்கு கரோனாவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றாா்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டு துபைக்குச் சென்ற தென் ஆப்பிரிக்க நாட்டை சோ்ந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Tags : Omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT