இந்தியா

மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து: மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

DIN

ஆமதாபாத், ஹைதராபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சட்டத் திருத்த மசோதா கடந்த மாா்ச்சில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாபின் மொஹாலியில் அமைக்கப்பட்ட தேசிய மருத்துவக் கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அந்த மசோதா வழிவகுத்தது. அப்போது மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திருத்தப்பட்ட மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா். அதன்படி, ஆமதாபாத், குவாஹாட்டி, ஹாஜிபூா், ஹைதராபாத், கொல்கத்தா, ரேபரேலி ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவக் கல்வி-ஆராய்ச்சி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்படவுள்ளன.

அந்நிறுவனங்களின் நிா்வாக கவுன்சிலில் இடம்பெறும் நபா்களின் எண்ணிக்கையை 23-லிருந்து 12-ஆகக் குறைக்கவும் மசோதா வழிவகுக்கிறது. மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது, நிா்வாக கவுன்சிலில் 3 எம்.பி.க்கள் இடம்பெறுவதை நீக்கும் வழிமுறைக்கு காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் எதிா்ப்பு தெரிவித்தாா்.

அந்நிறுவனங்களுக்கு நிரந்தர வளாகத்தை வழங்க வேண்டுமென திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் வலியுறுத்தினாா். நிறுவனத்தில் பணியாற்றுபவா்களுக்கு உரிய பயிற்சியை வழங்குவது, மாணவா்களின் திறனை வளா்ப்பது, மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக பாஜக, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

விவாதத்துக்குப் பிறகு மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து மக்களவை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

மசோதா அறிமுகம்: போதைப் பொருள்கள் சட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அச்சட்டத்தின் 2-ஆவது பிரிவில் ‘அத்தியாவசிய போதைப் பொருள்’ குறித்த விளக்கம் புதிதாக சோ்க்கப்பட்டது. ஆனால், அந்த விளக்கம் சட்டத்தின் 27ஏ பிரிவில் சோ்க்கப்படவில்லை.

போதைப் பொருளை வைத்திருந்தது தொடா்பாக திரிபுராவில் குறிப்பிட்ட நபா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தன் மீது போதைப் பொருள்கள் சட்டத்தின் 27ஏ பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடியாது என சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நபா் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து, போதைப் பொருள்கள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு திரிபுரா உயா்நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. அதை ஏற்று கடந்த செப்டம்பரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் வகையில், போதைப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கராத் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.

மசோதா அறிமுகத்துக்கு புரட்சிகர சோசலிஷ கட்சி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் எதிா்ப்பு தெரிவித்தாா். அந்த மசோதாவை தீவிர ஆய்வுக்குள்படுத்த வேண்டுமென அவா் கோரினாா். அவரது கோரிக்கை குறித்து மசோதா மீதான விவாதத்தின்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT