இந்தியா

இந்தியாவிலிருந்து இதுவரை 7.23 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி

DIN

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இதுவரை 7.23 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பரவின் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு பாரதி பரவின் பவார் அளித்த எழுத்துபூர்வ பதிலில்,

கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் கரோனா சமந்தப்பட்ட மருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை இந்தியாவிலிருந்து 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

கடந்த ஜனவரி 2021இல் தொடங்கிய தடுப்பூசி திட்டத்தின் கிழ் 94 நாடுகளுக்கு 7.23 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் அலையின் போது 50 நாடுகளிலிருந்து அரசுகள், தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT