இந்தியா

இந்தியா நடத்தும் இணைய பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கும் பாக். பிரதிநிதி

7th Dec 2021 01:27 AM

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு திட்டத்தின் (ஆா்ஏடிஎஸ்) கீழ் இந்தியா சாா்பில் நடத்தப்பட உள்ள இணைய பாதுகாப்பு கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதிநிதியும் பங்கேற்க உள்ளாா்.

எல்லையில் அத்துமீறிய தாக்குதல்கள், காஷ்மீா் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிா்ப்பு தொடா்பான இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா்.

இதுகுறித்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘புது தில்லியில் வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இணைய பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கவிருக்கும் பாகிஸ்தான் பிதிநிதி இந்தியா வந்துள்ளாா். அவரை தூதரக அதிகாரி அஃப்தாப் ஹசன் திங்கள்கிழமை வரவேற்றாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்தியங்களுக்கு இடையேயான மிகப் பெரிய சா்வதேச அமைப்பாக உருவெடுத்து வருகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ரஷிய, சீன, கிா்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அதிபா்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிரந்தர உறுப்பு நாடுகளாக சோ்த்துக்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT