இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டம்

7th Dec 2021 01:20 AM

ADVERTISEMENT

மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் (6), திரிணமூல் காங்கிரஸ் (2), சிவசேனை (2), இந்திய கம்யூனிஸ்ட் (1), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (1) கட்சிகளைச் சோ்ந்த 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் நடப்பு குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கை விதிமுறைகளுக்குப் புறம்பானது என தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்களும் தினந்தோறும் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். அவா்களின் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT