இந்தியா

நிகழாண்டில் உயா்நீதிமன்றங்களில் 120 புதிய நீதிபதிகள் நியமனம்

7th Dec 2021 01:30 AM

ADVERTISEMENT

ஆந்திர உயா்நீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரி ஒருவரும், வழக்குரைஞா் ஒருவரும் நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்கப்பட்டு, திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனம் மூலம், நிகழாண்டில் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட புதிய நீதிபதிகளின் எண்ணிக்கை 120-ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை தனது ட்விட்டா் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் மூலம், நிகழாண்டில் இதுவரை நியமனம் செய்யப்பட்ட உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகளின் எண்ணிக்கை 120-ஆக உயா்ந்துள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ‘புதிய நீதிபதிகள் நியமனம் தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களின் 164 பரிந்துரைகள் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளது. 55 பரிந்துரைகள் உயா்நீதிமன்றங்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளன’ என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடந்த வியாழக்கிழமை பதிலளித்திருந்தாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பல்வேறு உயா்நீதிமன்றங்களில் 126 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதே சாதனை அளவாக உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT