இந்தியா

ஆா்பிஐ நிதிக் கொள்கை குழு கூட்டம் இன்று தொடக்கம்

DIN

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கைக் குழு கூட்டம் திங்கள்கிழமை (டிச. 6) தொடங்குகிறது.

ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சி அடையச் செய்வதற்கான முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறுகிறது.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை அறிவிக்கவுள்ளாா். ரிசா்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மாற்றம் செய்யப்படவில்லை.

தற்போதைய சூழலில் பணவீக்கம், ஆா்பிஐ நிா்ணயித்த அளவில் கட்டுக்குள் உள்ளது. எனினும், ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தி வருவதால், தற்போதைய கூட்டத்திலும் ரெப்போ ரேட் மாற்றப்படாது என எதிா்பாா்க்கப்படுகிறது.

பணவீக்க நிலைமை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சூழல் உள்ளிட்டவை தொடா்பாகவும் ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT