இந்தியா

விவசாயிகளுக்கு ரத்தக் கண்ணீரை வரவழைத்த வெங்காயம்: 1,123 கிலோ 13 ரூபாயா?

PTI


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 1,123 கிலோ வெங்காயத்தை விற்று வெறும் 13 ரூபாய் ஈட்டியிருக்கிறார்கள்.

கடுமையான மழை மற்றும் குளிர் காரணமாக, செடிகள் பாதிக்கப்பட்டு, காய்கறிகள் விலை உச்சம் தொட்டிருக்கும் நிலையில், இப்படி வெங்காயம் விலை குறைந்திருக்கக் காரணம் அதன் தரம்தான் என்கிறார்கள் காய்கறி தரகர்கள்.

காய்கறி தரகர் ஒரு ரசீதைக் காண்பிக்கிறார். அதில், பப்பு காவடே என்ற விவசாயி அனுப்பிய 1,123 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,665.50 விலை கொடுக்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில், அவரது செலவு, தொழிலாளர் கூலி, எடைபோட கட்டணம், விளைபொருளை தரகரின் கடைக்கு எடுத்துவந்த போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை ரூ.1,651.98 ஆக உள்ளது.  இதில் வெங்காய உற்பத்திக்கான செலவு சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், அந்த விவசாயிக்கு 1,123 கிலோ வெங்காயத்துக்கு கிடைத்த தொகை ரூ.13.

या १३ रूपयामधून सरकारचे १३ वा घालावे का ?

सोलापूर कृषी उत्पन्न बाजार समितीत काल बापू कावडे या शेतकर्यांने २४ पोते कांदे रूद्रेश पाटील या व्यापा-याला विक्री केले. जवळपास ११२३ किलो कांदे विकून pic.twitter.com/ZergTblfF0

இந்தத் தகவலை, மக்களவை முன்னாள் உறுப்பினர் ராஜூ ஷெட்டி தனது சுட்டுரையிலும் பதிவிட்டுள்ளார். அதில், 24 மூட்டை வெங்காயத்தை, தரகர்களிடம் விவசாயிகள் கொடுத்ததற்கு, அவர்களுக்குக் கிடைத்திருக்கும் தொகை வெறும் 13 ரூபாய்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த 13 ரூபாயை வைத்துக் கொண்டு, அடுத்து அவர் எப்படி விவசாயத்தை தொடர முடியும். வெங்காயம் விலை விண்ணைத் தொடும் போது உடனடியாக, வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இப்போது, விவசாயிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தின் விலையை அதிகரிக்க என்ன செய்யப் போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லவேளை, போக்குவரத்துக் கட்டணத்துக்குக் கொடுக்குமளவுக்காவது விலை கிடைத்ததே. இல்லையென்றால், அந்தத் தொகையையும், விவசாயியே தனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, காய்கறி தரகர்கள் கூறுகையில், எதிர்பாராத மழை மற்றும் வெள்ளத்தால், இந்த வெங்காயத்தின் தரம் மிகவும் குறைவாக இருந்ததே இவ்வளவு குறைவான விலை கொடுக்கக் காரணம். மற்றபடி நல்ல வெங்காயமாக இருந்திருந்தால் நல்ல விலை கிடைத்திருக்கும். இது துரதிருஷ்டவசமான மற்றும் விதிவிலக்கான ஒன்று என்று கூறுகிறார் வெகு இயல்பாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT