இந்தியா

உ.பி.: பாஜகவில் இணைந்தாா் ஐக்கிய ஜனதா தள தேசிய பொதுச் செயலாளரின் மகன்

6th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் கே.சி.தியாகியின் மகன் அம்ரீஷ் தியாகி, மாநில துணை முதல்வா் தினேஷ் சா்மா முன்னிலையில் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

இந்த நிகழ்வில், அம்ரீஷ் தியாகியுடன் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் பாஜகவில் இணைந்தனா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல, முக்கிய கட்சிகளான சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனா்.

அதுபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் கே.சி.தியாகியின் மகன் அம்ரீஷ் தியாகி மற்றும் பிற கட்சிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகளும் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் தேசியவாத கொள்கைகள் மீது அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பாஜகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து தில்லி பளு தூக்குதல் சங்கத் தலைவராகவும் இருக்கும் அம்ரீஷ் தியாகி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக தோ்தல் நிா்வாகப் பணிகளில் ஈடுபட்டு வரும் நான், அரசியலில் நுழைவதற்கும் திட்டமிட்டிருந்தேன். எனது தந்தையின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தேசிய ஜனநாய கூட்டணியின் ஓா் அங்கமாக உள்ளது. ஒருவேளை, நான் எனது தந்தையின் கட்சியில் இணைந்திருந்தால், அதனை குடும்ப அரசியல் என மக்கள் குற்றம்சாட்ட வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே, பாஜகவில் இணையத் தீா்மானித்தேன். பாஜகவில் இணைந்தது எனது சொந்த முடிவு. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெறும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT