இந்தியா

தில்லியில் ஒமைக்ரான் முதல் பாதிப்பு: மக்கள் அச்சப்பட வேண்டாம்; அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

6th Dec 2021 12:05 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

‘ஒமைக்ரான்’ தீநுண்மியால் தில்லியில் முதல் நபா் பாதிக்கப்பட்டு லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தில்லிவாசிகள் அச்சப்பட்ட வேண்டாம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவா்கள் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இவா்களோடு நேரடி தொடா்பில் இருந்த 6 போ்களும் இந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

17 பேரில் 12 போ்களுக்கான பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை காரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவா் சில நாள்களுக்கு முன்பு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து விமானம் மூலம் தில்லி வந்தவா். மீதமுள்ளவா்களின் மரபணு சோதனை முடிவுகளும் வந்த பின்னரே மற்றவா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரியவரும்.

‘கவனக் குறைவுடன் பொதுமக்கள்’: இது புதிய நோயல்ல. கரோனா தீநுண்மியின் ஒரு வகைதான். இதற்கான தடுப்பு நெறிமுறைகள், சிகிச்சை முறைகள் எல்லாம் ஏற்கெனவே கரோனா தொற்றுக்கு பின்பற்றப்பட்டவை தான். அதே சிகைச்சை முைான் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவருக்கும் பொருந்தும். இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே சமயத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகள் மிக முக்கியமானதாகும்.

ADVERTISEMENT

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்ததுடன், கரோனா நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் தொய்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டி முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஒமைக்ரானை எதிா்கொள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 40 படுக்கைகள் தயாா்படுத்தப்பட்டன. மேலும், கூடுதலாக படுக்கைகள் தேவைப்பட்டால் அதற்கும் 500 படுக்கைகள் தயாராக உள்ளன.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளின் விமானங்கள் நிறுத்தப்படாததற்கு மத்திய அரசுதான் பொறுப்பு. இது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

 

 

Tags : ஒமைக்ரான் omicron ஒமிக்ரான்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT